ஆண்டிமடத்தில் கார் தீபற்றியதில் தனியார் ஹோட்டல் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலி ஆண்டிமடம் காவல்துறையினர் விசாரணை.*

ஆண்டிமடத்தில் கார் தீபற்றியதில் தனியார் ஹோட்டல் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலி ஆண்டிமடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.;

Update: 2025-02-13 04:08 GMT
அரியலூர், பிப்.13- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் ஹோட்டல் வைத்து நடத்தி வருபவர் அன்பழகன். இவர் இன்று காலை வேலை நிமித்தமாக வீட்டில் இருந்து காரை எடுத்து புறப்பட்டு சென்றபோது சுமார் 100 மீட்டர் தூரத்தில் திடீரென கார் தீ பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் ஏற்பட்ட தீயானது மலமளவென பரவி கார் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதில் காரை ஓட்டிச் சென்ற அன்பழகன் காரில் இருந்து இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் எவ்வளவோ போராடியும் அவரை மீட்க முடியவில்லை. கார் முற்றிலும் எரிந்த நிலையில் ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கருகிய நிலையில் உயிரிழந்த அன்பழகனை மீட்டனர். இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News