புதிய கட்டிடம் கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு..

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலை அறிவியல் கல்லூரி கட்டிடத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2025-02-13 16:56 GMT
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட செல்லூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலை அறிவியல் கல்லூரி கட்டிட கட்டுமான பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத் தலைவர் மதிவாணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரெக்ட் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Similar News