மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அமைச்சர் பங்கேற்பு.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே செல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார் உயர்கல்வித்துறை அமைச்சர்.;
திருவாரூர் மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், முன்னிலையில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் முகாம் திட்ட துவக்க விழா திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் முன்னிலையில், உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் தலைவர் மதிவாணன்,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் ஆகியோர் உடனிருந்தனர். தமிழ்நாடு அரசானது, தற்பொழுது மூன்றாம் கட்டமாக மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஒரு திட்டத்தினை அறிவித்ததோடு அல்லாமல் அத்திட்டம் மக்களிடம் எவ்விதத்தில் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும், திட்டம் எவ்வாறு செம்மையாக செயல்படுத்தப்படுகிறது என்பதனை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்திட அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட அரசு உயர் அதிகாரிகளை நியமித்துள்ளார்கள். இம்முகாமில், 15 துறைகளைச் சேர்ந்த 44 சேவைகளை பொதுமக்களுக்கு விரைவாக வழங்கிடும் பொருட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பொதுமக்களின் மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும்பொழுது மனுவின் நிலையினை அறிந்து கொள்ளும் வகையில் பயனாளிகளின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.