உயர்கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் மஞ்சன வாடி திரு ராமேஸ்வரம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது.;
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மஞ்சனவாடி ஊராட்சியில் திருராமேஸ்வரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட பலன் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் 15 அரசு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்று பதிவு செய்து அவற்றின் மீதான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தினர்.