அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் துணைவேந்தர் ஆய்வு
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் துணைவேந்தர் ஆய்வு மேற்கொண்டார்;
அரியலூர், பிப்.14- அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.நாராயணசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அனைத்து வார்டு பகுதிக்கும் சென்ற அவர், அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதம், நோயாளிகளிடம் பணியாளர்கள் நடந்து கொள்ளும் விதங்கள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்து, கோப்புகளை ஆய்வு செய்தார். பின்னர், மருத்துவமனை கண்காணிப்பாளர், நிலைய மருத்துவர், அனைத்து துறை மருத்துவ தலைவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் ஏனைய அனைத்து பணியாளர்களுடன் கலந்துறையாடினார். அதனை தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளிடம் பேசிய துணை வேந்தர் நாராயணசாமி, மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், உயர்ந்த சிந்தனைகளுடனும் செயல்பட வேண்டும் என்றார்.இந்த ஆய்வின் போது, அக்கல்லூரியின் முதன்மை முத்துகிருஷ்ணன், துணை முதன்மையர் ஜெனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், நிலைய மருத்துவ அலுவலர் கொளஞ்சிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். :