உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலை திருவிழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்மவிகாசப்ரியா அம்பா தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். பள்ளி முதல்வர் சந்திரா வரவேற்றார். சிறப்பு விருந்தினர் புதுச்சேரி அரசு சட்டத்துறை செயலாளர் சத்தியமூர்த்தி, இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு சான்றிதழ், விருதுகள் வழங்கி பாராட்டினார். பின், அவர் பேசுகையில், 'பள்ளிப் படிப்பை நன்றாக புரிந்து படிக்க வேண்டும்.பள்ளிக் கல்வியே உயர்கல்விக்கு அடித்தளமாக அமையும். சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட வேண்டும். நம்பிக்கையோடு கல்வி, வாழ்க்கையை துவங்க வேண்டும். சிறந்த கல்வியை பெறுவதோடு, நல்ல பாதையில் செல்ல வேண்டும்' என்றார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.