திருவெண்ணைநல்லூர் அருகே பைக்கில் சென்றவா் மயங்கி விழுந்து மரணம்

பைக்கில் சென்றவா் மயங்கி விழுந்து மரணம்;

Update: 2025-02-14 05:42 GMT
விழுப்புரம் வட்டம், சிறுவந்தாடு சிவன்கோவில் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன்கள் சரவணன், செந்தில் (45). இவா்கள் இருவரும் புதன்கிழமை திருவெண்ணெய்நல்லூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். செந்தில் பைக்கை ஓட்டினாா்.திருவெண்ணெய்நல்லூரில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே சென்றபோது, பைக்கிலிருந்து கீழே இறங்கிய நிலையில் செந்தில் சாலையில் மயங்கி விழுந்தாா்.108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை, பரிசோதித்த மருத்துவா்கள், செந்தில் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Similar News