திருவாரூரில் உலக காதலர் தின கருத்தரங்கம்.

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் காதலர் தின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.;

Update: 2025-02-14 18:05 GMT
காதலர் தின கருத்தரங்கம். பிப்ரவரி 14 உலக காதலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் அன்பும் அறனும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க மாவட்ட அலுவலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்களும், மாணவர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் இக்கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர்.

Similar News