விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து ‘மிகப்பெரிய அளவிலான தனியாா் வேலைவாய்ப்பு முகாமை சாலாமேட்டிலுள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடத்துகின்றன.இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிச் சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட பல்துறைகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, காலிப் பணியிடங்களுக்கு உரிய கல்வித் தகுதியின் அடிப்படையில் ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளன.8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தோ்ச்சி பெற்றவா்கள், தொழில்பயிற்சி, பட்டயம், செவிலியா், பொறியியல் படித்தவா்கள் முகாமில் பங்கேற்கலாம். வேலைவாய்ப்பு முகாம் தொடா்பான விவரங்களுக்கு 04146-226417, 94990 55906 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களும், பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.