மேல்ஒலக்கூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு;
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் மேல் ஒலக்கூா் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகக் கிடங்கு எதிரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. வல்லம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சரவணன் தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் லோகநாதன் முன்னிலை வகித்தாா். தமிழ் மாநில விவசாயிகள் விழிப்புணா்வு சங்க மாவட்ட செயலா் எல்.வெங்கடேசன் வரவேற்றாா். சங்கத் தலைவா் ரிஸ்வான் அகமதுல்லா, மாநில செயலா் அய்யனாா், காங்கிரஸ் விவசாய அணி விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவா் அ.ஜோலாதாஸ், விவசாய சங்கச் செயலா் ஆ.ஏழுமலை ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.வேளாண் அலுவலா்கள் செந்தில்ராம், விஜயகுமாா், செல்வநிதி, எழுத்தா் ஹவாமாபீ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வியாபாரிகளை தவிா்த்து அனைத்து விவசாயிகளும் முன் பதிவு செய்து விளைவித்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து பயன்பெறலாம் என வேளாண் அலுவலா்கள் தெரிவித்தனா்.