வெள்ளகோவிலில் ரத்ததான முகாம்
வெள்ளகோவிலில் தனியார் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது;
வெள்ளகோவிலில் மகாத்மாகாந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, அரிமா சங்கம், அரசு சுகாதார நிலையம் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் முத்தூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் டி.ராஜலட்சுமி தொடங்கி வைத்தார். வெள்ளகோவில் அரிமா சங்கத் தலைவர் என். சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை தலைவர் ஆர்.ராஜ்குமார், அரிமா சங்க பொறுப்பாளர்கள் எம்.எஸ்.அருண்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 50 பேரிடம் இருந்து 50 யூனிட் ரத்தம் பெறப்பட்டு தாராபுரம் அரசு ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது. இதில் நற்பணி மன்ற செயலாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் கோபி கிருஷ்ணன் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.