பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம்
மூலனூரில் பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம்;
பா. ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக மோகனப்பிரியா சரவணன் நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து தெற்கு மாவட்ட தலைவர் அறிமுகக் கூட்டம் மூலனூர் திலகம் திருமண மண்டபத்தில் மூலனூர் ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்றது. கூட்டத்தில் அவருக்கு ஒன்றியநிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் மூலனூர் தெற்கு ஒன்றிய தலைவர் செல்வராஜ், வடக்கு ஒன்றியத்தலைவர் குழந்தைவேல், மாநில நிர்வாகி தினேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.