போலீஸ், தீயணைப்பு படை வீரர்கள் குடும்பத்தினர்களுக்கான பள்ளி மாணவர்களுக்கான பல்நோக்கு மருத்துவ முகாம் சப் கலெக்டர் தொடங்கி வைத்தார்
செய்யாறில் சிப்காட் காலனி தொழிற்சாலைகள் மூலம் போலீஸ், தீயணைப்பு படை வீரர்கள் குடும்பத்தினகள், பள்ளி மாணவர்களுக்கான பல்நோக்கு மருத்துவ முகாம் சப் கலெக்டர் தொடங்கி வைத்தார்;
செய்யாறில் சிப்காட் காலனி தொழிற்சாலைகள் மூலம் போலீஸ், தீயணைப்பு படை வீரர்கள் குடும்பத்தினகள், பள்ளி மாணவர்களுக்கான பல்நோக்கு மருத்துவ முகாமை சப் கலெக்டர் பல்லவி வர்மா தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தாயார் அப்பாய் திருமண மண்டபத்தில் செய்யாறு செஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், லோட்டஸ் புட்வேர், என்டர்பிரைசஸ் லிமிடெட், ஈஸ்ட் விண்டு புட்வேர் கம்பெனி லிமிடெட் சார்பில் பல்நோக்கு மருத்துவ முகாம் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மூலமாக நடைபெற்றது. பல்நோக்கு மருத்துவ முகாமினை செய்யாறு சப் கலெக்டர் பல்லவி வர்மா தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் ஏடிஎஸ்பி சிவனு பாண்டியன், செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குனர் சதீஷ்குமார், செய்யாறு டிஎஸ்பி எம்.சண்முகவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யாறு செஸ் டெவலப்பர்ஸ் லோட்டஸ் நிறுவன பொது மேலாளர்கள் மணிமாறன், ஆனந்தகுமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். பல் நோக்கு மருத்துவ முகாமில் போலீஸ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் முன்னிலை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள், மாமண்டூர் பகுதியில் உள்ள சிறப்பு பள்ளியான பான்செகஸ் ஸ்பெஷல் ஸ்கூல் மாணவ மாணவிகளுக்கும் மாங்கல் கூட்டுச்சாலையில் அமைந்துள்ள ரூரல் எய்டு குழந்தைகள் காப்பகம் மாணவ மாணவிகளுக்கும், செய்யாறு சென்ட் லூர்து குழந்தைகள் காப்பகம் மாணவ மாணவிகளும் நகர பொதுமக்கள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற்றனர்.