தருமராஜா கோயில் கும்பாபிஷேக விழா எம்பி, எம்.எல்.ஏ.பங்கேற்பு.
கண்ணமங்கலம் அருகே வண்ணாங்குளத்தில் தருமராஜா கோயில் கும்பாபிஷேக விழா எம்பி, எம்.எல்.ஏ.பங்கேற்பு;
கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் தருமராஜா கோயில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி கோயில் வெளி வளாகத்தில் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு, கோ பூஜை, தம்பதி சங்கல்பம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனை தொடர்ந்து மூலவர், கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் ஆரணி எம்பி எம்.எஸ்,தரணிவேந்தன், எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர், விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.