மங்களம்பாளையம் பிரிவில் நிற்காமல் சென்றதால் தனியார் பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
மங்களம்பாளையம் பிரிவில் நிற்காமல் தாராபுரம் அருகே சென்றதால் தனியார் பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்;
தாராபுரத்தில் இருந்து பழனிக்கு தனியார் பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் தாராபுரம்-பழனி ரோடு மங்களம்பாளையம் பிரிவிற்கு 3 தொழிலாளர்கள் ஏறினார்கள். இந்த பஸ் மங்களம்பாளையம்பிரிவில் நிற்காது என்று நடத்துனர் கூறிவிட்டதால் தொழிலாளர்கள் இறங்கி வேறு பஸ் சில் மங்களாம்பாளையத்திற்கு வந்து சேர்ந்தனர். விடுமுறை தினமான நேற்று தனியார் பஸ் மங்களம்பாளையம் பிரிவில் நிற்காமல்சென்றது குறித்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பழனி சென்று திரும்பி வந்த தனியார் பஸ்சை நேற்று மாலை 6 மணி அளவில் மங்களம்பாளையம் பிரிவில் பொதுமக்கள் சிறை பிடித்தனர். தொடர்ந்து சாலை மறிய லில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தாராபுரம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அரசு தனியார் பஸ்கள் மங்களம்பாளையம் பிரிவில் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதிகூறினார். அரசு போக்குவரத்து கழக கிளைக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டது. போலீசார் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.