பழனிக்கு பாதயாத்திரை செல்லும் எடப்பாடி முருக பக்தர்கள்
தாராபுரம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை செல்லும் எடப்பாடி முருக பக்தர்கள்;
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் இருந்து ஆண்டு தோறும் ஏராளமான முருக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு காவடி சுமந்து செல்வார்கள். இவர்கள் காங்கேயம், தாராபுரம் வழியாக பழனி செல்வது வழக்கம். இந் நிலையில் நேற்று தாராபுரத்திற்கு மாலை நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து ஆங்காங்கே சாலை ஓரத்தில் தங்கி வருகின்றனர். தாராபுரம் பூக்கடை கார்னர் பகுதியில் இருந்து அலங்கியம் சாலை, போலீஸ் நிலையம், ஜவகர் நகர் பகுதியில் சாலை ஓரங்களில் படுத்து தூங்குகின்றனர்.இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. இவர்களுக்கு மட்டும் பழனி மலையில் தங்க ஒருநாள் அனுமதி உண்டு. இதனால் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தும் வருகின்றனர். இதனால் தாராபுரம் நகரின் முக்கிய பகுதிகள் அனைத்தும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு நகரம் முழுவதும் ஸ்தம்பித்து உள்ளது. இனி வரும் காலங்களில் ஈரோடு, சேலம், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.