முறைகேடாக மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதாக புகார்
ரூபாய் பத்து லட்சம் மதிப்புடைய சீமை கருவேல மரங்கள் வெட்டப்படுவதாகவும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அதிமுகவினர் மற்றும் விவசாயிகள் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்*;
ஆவியூர் கண்மாய் அருகே முறையான டெண்டர் இன்றி ரூபாய் பத்து லட்சம் மதிப்புடைய சீமை கருவேல மரங்கள் வெட்டப்படுவதாகவும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அதிமுகவினர் மற்றும் விவசாயிகள் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா ஆவியூர் அருகே தரகனேந்நதல் கண்மாய் பகுதியில் சுமார் 5 1/2 ஏக்கர் பரப்பளவில் 25 வருடங்களாக வெட்டப்படாத சீமை கருவேல மரங்கள் நன்கு முளைத்து வளர்ந்துள்ளன. இந்த சீமை கருவேல மரங்களை வெட்டி, அங்கு மரங்கள் வளர்ப்பதற்கு காரியாபட்டி வட்டாட்சியர் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தோப்பூர் முருகன் தலைமையில் அதிமுகவினர் மற்றும் விவசாயிகள், சீமை கருவேல மரங்கள் வெட்டப்படும் இடத்தில் காரியாபட்டி வட்டாட்சியர் தன்னுடைய அதிகாரத்தை மீறி மரக்கன்றுகள் வைக்க அனுமதி அளித்துள்ளதாகவும், 25 வருடங்களாக வெட்டப்படாத அந்த சீமை கருவேலங்களின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் எனவும், எந்தவித முறையான டென்டரும் இன்றி அந்த மரங்கள் வெட்டப்பட்டு லாரிகளில் ஏற்றி செல்லப்படுவதாகவும் அதை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அருப்புக்கோட்டையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு விடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.