தொழிற் சங்கத்தினர் தெருமுனை பிரசாரக் கூட்டம்
தொழிற் சங்கத்தினர் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.;
அரியலூர், பிப். 19- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாதா கோயில் அருகே அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் தண்டபாணி, சிஐடியு மாவட்டச் செயலர் துரைசாமி உள்ளிட்டோர் தலைமை வகித்து, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மற்றும் இதர பொருள்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைத்து விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் அனைத்து தொழிற் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.