தெரு நாய்கள்

ஈரோடு மாநகராட்சியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள், இறைச்சிக் கடை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.;

Update: 2025-02-19 12:50 GMT
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பி.பெ.அக்ரஹாரம், கனிராவுத்தர் குளம், சுண்ணாம்பு ஓடை, வில்லரசம்பட்டி, வெண்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான இறைச்சிக்கடைகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, 100க்கும் மேற்பட்ட பிராய்லர் இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த இறைச்சிக் கடைகளில் இருந்து சேகரமாகும் கழிவுகளை, ஒரு சிலர் சாலையோரத்தில் ஆங்காங்கே கொட்டி வருகின்றனர். இதனை உண்ணும் தெருநாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் அவ்வப்போது ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து, ஆடுகளையும், கோழிகளையும் கடித்து குதறி வருகிறது. இதன் காரணமாக, கடந்த ஓராண்டில் 50க்கும் மேற்பட்ட ஆடுகளும், 100க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளும், ஒரு பசு மாடும் உயிரிழந்திருக்கின்றன. மேலும், சாலையில் வலம் வரும் தெருநாய்களால், 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கியுள்ளனர். அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டாலும் கூட, இறைச்சிக் கடை உரிமையாளரில் ஒரு சிலரின் அஜாக்கிரதையால், கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில், மாநகராட்சியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள், இறைச்சிக் கடை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Similar News