சோழர்கால சிவலிங்கம் தொல்லியல் துறை அலுவலர் நேரில் ஆய்வு
தோப்பில் கிடக்கும் சோழர்கால சிவலிங்கம் தொல்லியல் துறை அலுவலர் நேரில் ஆய்வு;
திருவள்ளூர் அருகே தோப்பில் கிடக்கும் சோழர்கால சிவலிங்கம் தொல்லியல் துறை அலுவலர் நேரில் ஆய்வு. திருவள்ளூர் மாவட்டம் கே கே சத்திரம் அருகே ஆற்காடு குப்பம் கிராமத்தில் ஆவுடை சதுரவடிவில் சிவலிங்கம் ஆவுடைலிங்கம் கேட்பாரற்று தேக்கு மரதோப்பில் குல நாச்சியம்மன் கோவில் அருகே உள்ளது. ஆவுடை சதுர வடிவ பீடத்தில் பின்னம் ஆகியதால் அதனை குளநாட்சியம்மன் கோவிலை ஒட்டிய பகுதியில் வைத்துள்ளனர் இதனை சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் அவ்வப்போது தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர் இதுகுறித்து கிராமத்தினர் அளித்த தகவலின் பெயரில் ஆவுடை லிங்கத்தை திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இது குறித்து தொல்லியல் துறையின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இதே போன்று சுற்றுவட்டாரத்தில் சிலைகள் ஏதும் அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் கூறிச் சென்றார் ஏதேனும் பழமையான சிவன் கோவில் இருந்திருக்கலாம் என்றும் அவை ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்று மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் தெரிவித்தார்