கோயிலை இடிக்க வந்த போது சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு தொல்லியல் துறையினர் ஆய்வு
நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக கோயிலைஇடிக்க வந்த போது நிலவறை சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு தொல்லியல் துறையினர் ஆய்வு;
திருவள்ளூர் அருகே நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக கோயிலைஇடிக்க வந்த போது நிலவறை சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு தொல்லியல் துறையினர் ஆய்வு திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக கற்களை பெயர்த்து எடுத்த போது முருகப்பெருமானின் மூலஸ்த்தானம் முன்பு உள்ள அர்த்தமண்டபத்தில் இருந்து நிலவறை சுரங்க பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 12ஆம் நூற்றாண்டு கால சுரங்கம் இருந்ததால் கிராமத்தினர் கோரிக்கை ஏற்று சாலை விரிவாக்கம் செய்யும் பணி நிறுத்தப்பட்டு கோயில் வளாகத்தில் அதனை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவலங்காடு வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சுரங்கமானது உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முருகன் கோயில் திருத்தணி முருகன் கோயிலுக்கு உட்பட்ட உப கோவில் என்பதால் கோவில் வளாகத்தில் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பழங்கால கல்வெட்டுகள் இருந்ததை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து கண்டறிந்தனர் இதனை படிமும் எடுத்து முழு கல்வெட்டையும் படித்து முடித்தால் கோவிலின் முழு வரலாறு மற்றும் அந்த பகுதியில் சுரங்கம் ஆகியவற்றை குறித்த தகவல்கள் வெளிவரும் என்று தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர்.