சேவூரில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல். இளைஞர் கைது.

ஆரணி அடுத்த சேவூரில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கொண்ட ஆரணி கிராமிய போலீஸார் கஞ்சாவை பறிமுதல் செய்தும், விற்பனை செய்த இளைஞரையும் கைது செய்தனர்.;

Update: 2025-02-19 15:19 GMT
ஆரணி அடுத்த சேவூரில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கொண்ட ஆரணி கிராமிய போலீஸார் கஞ்சாவை பறிமுதல் செய்தும், விற்பனை செய்த இளைஞரையும் புதன்கிழமை கைது செய்தனர். ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் பாபு(29) என்பவர் சேவூரில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததின்பேரில் சேவூரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அருகர் கோயில் தெருவின் பின்புறம் முட்புதரில் பாபு என்பவர் மறைந்து இருந்தார். அப்போது போலீஸார் பாபுவை மடக்கி பிடித்து அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் பாபுவை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Similar News