பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் சிக்கினார்
பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் சிக்கினார்;
பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் சிக்கினார் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் டி.என்.பாளையம் அருகே அரக்கன்கோட்டை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாகபெட்டிக்கடை உரிமையாளரான ரமணி தேவி (வயது 58) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த 1 கிலோ 125 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.