வாலிபர் பலி

வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் பலி;

Update: 2025-02-20 06:46 GMT
ஈரோடு மாவட்டம் rத்தியமங்கலம் அடுத்த ஏரப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளையமூர்த்தி (28). இவர் கடந்த 16ம் தேதி, அப்பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, அவர் எதிர்பாரா விதமாக தவறி வாய்க்காலில் விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர், இளையமூர்த்தியின் நண்பர்கள் வாய்க்காலில் இறங்கி தேடியும் இளைய மூர்த்தி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை 7 மணி அளவில், உக்கரம் பகுதியில் வாய்க்காலில் தேடியபோது, இளையமூர்த்தியின் உடல் மிதந்து வந்தது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இளையமூர்த்தியின் தாயார் லதாமணி அளித்த புகாரின் பேரில், கடத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News