யானையால் பரபரப்பு

திம்பம் மலைபாதையில் 20 -வது கொண்டை ஊசி வளைவில் தடுப்பு சுவரைத் தாண்டி சென்ற ஒற்றை யானையால் பரபரப்பு;

Update: 2025-02-21 03:04 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை மான் புலி சிறுத்தை கரடி உள்பட பல்வேறு விலங்குகள் திம்பம் மலைப்பாதையை கடப்பது வாடிக்கையான ஒன்று.இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் ஒற்றை யானை ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக 20-வது கொண்டை ஊசி வளைவிற்கு இறைத் தேடி வந்தது. கொண்டை ஊசி திரும்பும் பொழுது திடீரென நின்று யானையால் வாகன ஓட்டி பெரிதும் அச்சம் அடைந்தார். சுமார் அரை மணி நேரம் அந்த பகுதியில் நின்ற ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த ஒற்றை யானை தடுப்பு சுவரைத் தாண்டி சென்று மீண்டும் மனப்பகுதிக்குள் சென்றது. இதன் பிறகு வாகன ஓட்டிகள் அந்த பகுதியை கடந்து சென்றனர்.

Similar News