டிரைவர் பலி
சித்தோடு அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி வடமாநில டிரைவர் பலி நண்பர் கண் முன்னே நடந்த சோகம்;
மஹாராஷ்டிரா மாநிலம் மெலகன் பகுதியைச் சேர்ந்தவர் குரைஷிநூர் முகமது (25). டிரைவரான அவர், கேரளாவில் இருந்து ஹைதராபாத்துக்கு கொண்டு செல்வதற்காக லாரியில் லோடு ஏற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று லாரியை நிறுத்தி விட்டு, நசியனூர் கீழ்பவானி வாய்க்காலில் சக டிரைவர்களுடன் சேர்ந்து குளித்துள்ளார். அப்போது, குரைஷிநூர் முகமதுக்கு நீச்சல் தெரியாத என்பதால், நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சக டிரைவர்கள் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த லாரி டிரைவர் வேலவன் கொடுத்த புகாரின் அடிப்படையில், சித்தோடு போலீசார் விசாரணை நடத்தினர். பெருந்துறை தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் வாய்க்காலில் தேடினர். இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுப்பிரமணியக்காடு என்ற இடத்தில் சேற்றில் மூழ்கியபடி இருந்த அவரது உடல் மீட்கப்பட்டது.