குமரி  புத்தகத் திருவிழா

நாகர்கோவில்;

Update: 2025-02-22 04:02 GMT
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்  இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத்திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா  நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 19.02.2025 அன்று துவக்கி வைத்தார்கள்.      நேற்று பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான போட்டிகள், பிற்பகல் 3.30 மணி முதல் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  அதனைத்தொடர்ந்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஆர்.ஸ்டாலின் தலைமையுரையாற்றினார்.        அவர் பேசுகையில், - சிறந்த ஆளுமை கொண்ட மனிதராக உருவாக வேண்டும் என்றால் புத்தகங்கள் வாசிக்க வேண்டும். குழந்தைகளுக்கு மட்டும் புத்தகத்தை வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் தாங்களும் புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். வீட்டில் நூலகத்தை அமைக்க வேண்டும். புத்தகங்கள் படிக்க படிக்க நமது மனதில் உள்ள அழுக்கு எண்ணங்கள் மாறும் என அவர் கூறினார்.        தொடர்ந்து எ.பி.எஸ்.ஆன்றோ “புத்தகம் புத்துலகம் படைக்கும் ஆயுதம்” என்ற தலைப்பிலும், வரலாற்றுச்சுடர் முனைவர் கா.பேபி “கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற தலைப்பிலும்  கருத்துரையாற்றினார்கள். அதனைத்தொடர்ந்து கலைமாமணி திரு.முத்து சந்திரன் அவர்களின் குழுவினர் வழங்கும் தோற்பாவை கூத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில்  நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, எழுத்தாளர்கள், பொதுமக்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News