கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு பராமரிப்பு பணிக்காக வந்து கொண்டிருந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் தென்தாமரை குளம் அடுத்த சந்தையடி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது பெண் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்தார். இது குறித்த தகவலின் பேரில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இறந்த பெண்ணுக்கு 55 வயது இருக்கும். பச்சை கலர் சேலையும் அதே கலர் பாவாடையும் அணிந்திருந்தார். இறந்தவரை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய விபரம் தெரியவில்லை. இறந்த கிடந்த பகுதியில் உள்ள கிராமங்களில் விசாரணை நடத்தியும் அவர் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் பெண்கள் யாராவது காணாமல் போய் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெளியூரை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வள்ளியூர், நாங்குநேரி, பணகுடி, திருநெல்வேலி பகுதியிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.