கன்னியாகுமரி டிஎஸ்பி எச்சரிக்கை

கன்னியாகுமரி;

Update: 2025-02-22 04:43 GMT
கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-      குமரி மாவட்டத்தில் முறையான அனுமதி இல்லாமலும் லைசென்ஸ்களை புதுப்பிக்காமலும் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர்கள் பல இயங்கி வருகின்றன. இங்கு பெண்களை பணியில்  அமர்த்தி விபச்சாரம் நடப்பது அதிகரித்து வருகின்றன. குடும்ப சூழ்நிலை, வறுமை போன்ற சூழலுக்காக இளம் பெண்களை அதிக சம்பளம் தருவதாக ஆசைவார்த்தை குறி இது போன்ற ஸ்பா சென்டர் பாலியல் தொழில் ஈடுபடுத்துகின்றனர்.       பொதுவாக மசாஜ் சென்டர்களில் பணியாற்றக் கூடியவர்கள் முறைப்படி அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இதற்கான பயிற்சியை முடித்து சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். இதில் எந்த நடைமுறையும் பின்பற்றுவது இல்லை என்று போலீசார் சோதனையில் தெரிய வருகிறது. மேலும் எச்சரிக்கை மீறி இது போன்ற மசாஜ் சென்டர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அபராதம் விதிக்கப்படும். லாட்ஜுகளில் நடந்தால் உரிய அனுமதி பெற்று லாட்ஜுகள் சீல் வைக்கப்படும் என கூறினார்.

Similar News