பின்தங்கிய பகுதிகளுக்கு திட்டம் தீட்டும் பொழுது தேவைப்படும் திட்டங்களை தீட்ட வேண்டும் - அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
பின்தங்கிய பகுதிகளுக்கு திட்டம் தீட்டும் பொழுது இப்பகுதியில் தேவைப்படும் திட்டங்களை தீட்ட வேண்டும் - அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு;
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் கிராமப்புற பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - பின்தங்கிய பகுதிகளுக்கு திட்டம் தீட்டும் பொழுது இப்பகுதியில் தேவைப்படும் திட்டங்களை தீட்ட வேண்டும் - அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு நாளிதழ்கள், தொலைக்காட்சியில் வரும் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் உத்தரவு விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரியாபட்டி, நரிக்குடி மற்றும் திருச்சுழி ஒன்றியங்களில் பல்வேறு அரசுத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து 43 துறை அலுவலர்களுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமையில் தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 36 ஊராட்சிக்கு 9 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை பணிகள் மேற்கொள்வதற்காக புதியதாக வாங்கப்பட்ட பேட்டரி வாகனத்தை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து அந்த அந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விருதுநகர் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியாக உள்ள திருச்சுழியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள், திருச்சுழியில் புதியதாக கட்டப்படும் பேருந்து நிலையம், சென்னிலைக்குடி பகுதியில் புதிதாக கட்டப்படும் சமத்துவபுரம் குடியிருப்பு கட்டிடங்கள் குறித்தும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்யப்படும் வேலைகள், சாலை, குடிநீர், போன்ற வசதிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு நடத்திய பிறகு அதிகாரிகளிடம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியபோது அனைவருக்கும் அரசினுடைய நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியாக இருப்பது திருச்சுழிதான் மற்ற பகுதிகளை பார்க்கும் போது நாம் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. இந்த நான்கு ஆண்டு காலத்தில் இதனை மையப்படுத்தி தான் செயல்பாடுகள் அமைந்துள்ளது. இந்த பின்தங்கிய பகுதிகளுக்கு என உருவாக்கப்பட்ட தனித்திட்டங்கள் என இது ஒட்டுமொத்தமாக பொருளாதார ரீதியாக முன்னேற்றத்திற்கும், சமுதாய சமூகம் முன்னேருவதற்கு நமது பகுதிகளில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். இப்பகுதிகள் முழுவதும் முழுக்க முழுக்க கிராமப்புறத்தை கொண்ட பகுதி. ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 8 முதல் 10 கிலோமீட்டர் செல்ல வேண்டும். மக்கள் தொகை குறைவான இப்பகுதியில் பெரும்பானோர் விவசாயத்தை நம்பி இருக்கின்றனர். அவர்களுக்காக நன்மைகளை நாம் செய்யும் போதும், வசதிகளை செய்யும் போதும் நாம் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சாலை வசதி, போக்குவரத்து வசதி, சுகாதாரம், கல்வி வசதியை நம் முழுமையாக உறுதி செய்ய வேண்டிய இடத்தில் உள்ளோம். அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். திட்டங்களை தீட்டும் போது இப்பகுதியினுடைய தேவைகளை உணர்ந்து கொண்டு அதற்குரிய திட்டங்களை தீட்ட வேண்டும். திட்டங்களை தீட்டி அதனை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், வரக்கூடிய ஆண்டு தேர்தல் வரக்கூடிய ஆண்டு இப்படிப்பட்ட காலத்தில் பல்வேறு தரப்புகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வரக்கூடும். கோரிக்கைகள் எண்ணிக்கையும் அதிகப்படும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நமது உள்ளாட்சி பிரதிநிதிகள் காலம் முடிவடைந்துள்ளது. பொதுமக்களிடம் வரக்கூடிய கோரிக்கைகள் அனைத்தும் அதிகாரிகள் பரிசளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரோ, அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ இவர்களெல்லாம் தலையிட்டு உங்களது கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்ற நிலை இல்லாமலும், பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வரும் பொழுது அவற்றை உரிய வகையில் கவனித்து அதிகாரிகளாக இருக்கக்கூடிய நீங்கள் அதனுடைய உண்மை தன்மையை அறிந்து அவ்வாறு அந்த பிரச்சனை இருக்கு என்று சொன்னால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை உடனடியாக பார்த்து சரி செய்ய வேண்டும் என்றும், ஆங்காங்கே இருக்கக்கூடிய சின்ன விஷயங்கள் குடிநீர் பிரச்சனை, சாலை பிரச்சனை, தெருவிளக்கு பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும். அப்படி தீர்த்து வைத்துவிட்டால் அந்த பிரச்சனையை அங்கேயே நம்மளுக்கு தீர்வு கிடைத்துவிடும். தீர்த்து வைக்காவிட்டால் அந்த பிரச்சனை பிரதிபலித்து விஸ்வரூபமாக மாறும். ஆரம்பத்திலேயே இது போன்ற பிரச்சினைகள் எல்லாம் சரி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் 43 துறை அரசு அதிகாரிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.