பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாளையம்பட்டி ஊராட்சி அருப்புக்கோட்டை நகராட்சி உடன் இணைக்கப்படாது என பாளையம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் பேச்சு

Update: 2025-02-22 13:08 GMT
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாளையம்பட்டி ஊராட்சி அருப்புக்கோட்டை நகராட்சி உடன் இணைக்கப்படாது என பாளையம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ உறுதி; கைதட்டி வரவேற்ற பொதுமக்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சியில் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.‌ இந்த ஊராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 6 முதல் 15 வார்டுகளை மட்டும் அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைக்கப்பட இருந்தது. இதற்கு பாளையம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஊராட்சியை நகராட்சியுடன் இருக்கக் கூடாது என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பாளையம்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சுகாதார வளாகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கலந்துகொண்டு பாளையம்பட்டி விரிவாக்கப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை, சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். மேலும் முத்தரையர் நகரில் கட்டப்பட்டுள்ள புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது பாளையம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் பாளையம் ஊராட்சியை அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைக்க கூடாது என கோரிக்கை விடுத்தனர். அப்போது பேசிய அமைச்சர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாளையம்பட்டி ஊராட்சி அருப்புக்கோட்டை நகராட்சி உடன் இணைக்கப்படாது என பொதுமக்களிடம் உறுதி அளித்தார். அமைச்சர் அறிவித்த உடன் அனைவரும் கைத்தட்டி வரவேற்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆத்திப்பட்டியில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை கட்டிடத்தையும் முன்னதாக, சூலக்கரையில் ரேஷன் கடை கட்டிடத்தையும் திறந்து வைத்த அமைச்சர் மாத்தி நாயக்கன்பட்டியில் புதிய அறிவுசார் மையத்திற்கும் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.‌ ‌

Similar News