குமரி கடற்பகுதியில் நாளை கள்ளக் கடல் எச்சரிக்கை

இந்திய கடல் சேவை மையம் அறிவிப்பு;

Update: 2025-02-22 14:10 GMT
கன்னியாகுமரி கடல் பகுதியில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை நாளை 23ஆம் தேதி மதியம் 2:30 மணி முதல் இரவு 12:30 மணி வரை 0.9 மீட்டர் முதல் 1.0 மீட்டர் உயரத்தில் கடல் அலைகள் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. இதனால் ஆரஞ்சு அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.         எனவே குமரி மாவட்ட மீன்பிடி தொழிலாளர்களும் கடற்கரையில் வசிப்பவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடல் கொந்தளிப்பு காணப்படும் என்பதால் சிறிய வளங்கள், படகுகள் கடலில் இந்த வேளையில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். கள்ளக்கடல் காரணமாக உயிருகின்ற கடல் அலைகள் காணப்படும் வேளையில் கடலுக்குள் நுழைவது, கடலில் இருந்து கரை பகுதிக்கு வருவதும் ஆபத்தான ஒன்றாகும்.        எனவே மீனவர்கள் கடலில் செல்வதும், கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இந்திய கடல் தகவல் சேவை மையம் முன்னறிவிப்பை திரும்பப்பெறும் வரை கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு நடைபெறும் விளையாட்டுகள், சுற்றுலாப் பயணிகள் செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும். மீன்பிடி உபகரணங்கள், படகுகள், வள்ளம் போன்றவற்றை துறைமுகங்களில் பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும் என அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Similar News