நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் லிப்ட் இயங்கத் தொடங்கியது
கன்னியாகுமரி;
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் முக்கியமான ரயில் நிலையமாக உள்ளது. இங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக இரண்டு நடைமேடைகளிலும் தாலா ஒரு லிப்ட் மஅமைக்க முடிவு செய்து பணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டுகள் தொடங்கப்பட்டது. ஆறு மாதத்தில் முடிக்க திட்டமிட்ட அந்த பணி நிர்வாக பிரச்சனை காரணங்களால் பணிகள் முடிய சற்று தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று பணிகள் நிறைவடைந்தது. இரு நாட்கள் சோதனை முறையில் லிப்ட் இயங்கியது. இன்று 22-ம் தேதி காலையில் இருந்து லிப்ட் முழுமையாக இயங்கத் தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மின்சாரத்திற்கு தனி லைன்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினார்.