குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு மின்சார துறையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் லைன்மேனாக கடந்த 10 வருடமாக பணியாற்றி வருபவர் திருப்பதிசாரத்தை சார்ந்தவர் வெங்கடேஷ் (40). இவருக்கு திருமணமாகியும் குழந்தைகள் இல்லை. இவர் இரவு-பகல் பாராமல் மக்கள் பணியாற்றி வருபவர். மேலும் ஆன்மீகத்தில் தீவிர பற்றுக்கொண்டவர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மின்சார தடையை சரிசெய்யம் பொழுது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்தவரை மீட்டு. நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆல்பத்திரியில் தீவிர.சகிட்சை பிரிவில் சிகிட்சை பெற்று வருகிறார். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள வெங்கடேஷுக்கு தினமும் அதிக விலையுள்ள உயிர்காக்கும் மருந்துகள் செலுத்தபடுகிறது. இந்நிலையில் இத்தகவலை கேள்விப்பட்ட அஞ்சுகிராமம் வியாபாரிகள் நலசங்க தலைவரும் சமூக சேவகருமான அஞ்சை ஜெஸீம் தலைமையில் கவுன்சிலர் ஜோஸ் திவாகர் முன்னிலையில் வியாபாரிகள், ஒட்டுநர்கள் உண்டியல் ஏந்தி நிதி வசூலித்தனர். மேலும் நிதிதிரட்டிய சமூக சேவகர் ஜெஸீம் கூறும்பொழுது அரசு மின்வாரிய ஒப்பந்த பணியாளர் வெங்கடேஷ் மிகவும் ஏழ்மையில் உள்ளதால் அவரின் மருத்துவ செலவுக்கு அரசு உதவிட வேண்டும் என்றார். மதங்கள், மொழிகள், இனங்கள், வசதிகளை கடந்து மக்கள் பணியாற்றிய ஊழியருக்கு நிதிதிரட்டிய மனிதநேய பண்பாளர்களை பொதுமக்கள் பாராட்டினர்.