அரசு பள்ளிகளில் முப்பெரும் விழா
முன்னாள் ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பாராட்டினர்;
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர் (பொ) மீனாட்சி அனைவரையும் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பகுத்தறிவு அரசு பள்ளி பேரியக்க குழு உறுப்பினரும் பொறியாளருமான த.ராஜோக்கியம்,பெரம்பலூர் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் இரா. ராஜோக்கியம் ஆகியோர் நிகழ்விற்கு முன் னிலை வகித்தனர். ஆண்டு அறிக்கையை பட்டதாரி ஆசிரியர் ஆக்னெஸ் ஸ்டெல்லா வழங்கினார். முன்னாள் ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பாராட்டி பேசுகையில், ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இப்பள்ளி இருக்கிறது என்று விளையாட்டு கலை இலக்கியம் நடனம் என பன்முகத்திறனோடு பள்ளி ஆகச் சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது என புகழாரம் சூட்டினார்.