குமரி மாவட்டம் ஈசாந்தி மங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி பிள்ளை மகள் சுமித்ரா (30). இவருக்கு 2016ம் ஆண்டு திருமணம் நடந்து. 2020ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் இரண்டு வருடம் கழித்து மறுபடியும் இவருக்கு இரண்டாவதாக பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தார்கள். இரண்டு திருமணங்கள் நடந்தும் அவருக்கு குழந்தை இல்லை. எனவே அங்கிருந்தும் பிரிந்து தனது தாய் வீட்டில் ஒரு வருடமாக வாழ்ந்து வந்ததார். மேலும் தைராய்டு நோய் இருந்ததாலும் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுமித்ரா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை குமாரசாமி பிள்ளை பூதப்பாண்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.