கன்னியாகுமரி மாவட்ட பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் நேற்று நாகர்கோவிலில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ ராம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசி பேசியதாவது:- நீதித்துறை மக்களின் நம்பிக்கையாக உள்ளது. பி சி ஆர் சட்டம் தாழ்த்தப்பட்ட மம்றும் பழங்குடியினருக்கு உரிமை மற்றும் நீதி வழங்கும் ஒளியாக உள்ளது. இந்த நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டு இருப்பதன் மூலம் சமூக நீதி மேம்படுத்துவதில் சிறந்த முன்னேற்றம் அடைந்து வருகிறோம் என்பதை உணர்த்துகிறது. நமது உரிமைகள் மீட்டெடுக்க நீதிமன்றங்கள் உள்ளன என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்க வேண்டும். சமூக நீதி ஊக்குவிக்கப்பட வேண்டும் அனைவரும் சமம் என்பது நீதி துறையின் கோட்பாடு ஆகும் என அவர் கூறினார்.