நீதித்துறையில் முதலமைச்சர் அதிக கவனம் - அமைச்சர் தகவல்

நாகர்கோவில்;

Update: 2025-02-23 04:04 GMT
நாகர்கோவில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா நடந்தது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:-              கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  நீதிமன்றம் பழமையான நீதிமன்றம் ஆகும். திமுக அரசு பொறுப்பேற்ற பின் நீதித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது. குறிப்பாக பழமையான நீதிமன்ற கட்டிடங்களை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். நாகர்கோவில், புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகின்றன. சென்னை உயர்நீதிமன்ற கட்டங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.       நீதித்துறை மீது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் குமரி மாவட்டத்தில் மேலும் புதிய மூன்று நீதிமன்றங்கள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News