கள் பறிமுதல்

அம்மாப்பேட்டை அருகே 5 லிட்டர் கள் பறிமுதல்;

Update: 2025-02-23 04:14 GMT
சென்னம்பட்டி, குருவரெட்டியூர், ஜரத்தல், குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக பனைமரத்தில் இருந்து கள் இறக்குவதாக புகார் எழுந்தது. அதன் பேரில், அம்மாபேட்டை போலீசார் தினசரி ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று குறிச்சி கல்பாவி பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் ராசு (64) என்பவர் பனைமரத்தில் இருந்து கள் இறக்கிக் கொண்டிருந்தார். இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 5 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

Similar News