தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை : - கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்தி கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட குளங்கள் பயன்படும் வகையில் திக்கணம் கோடு பாசன கால்வாய் உள்ளது. தற்போது இந்த கால்வாயில் ஆக்கிரமிப்பு உள்ளதாக விவசாயிகள் என்னை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து அந்த கால்வாயை ஆய்வு செய்தபோது கால்வாயில் அந்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் உள்ள இலை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி பல வருடங்களாக அந்த இடத்தில் துர்நாற்றம் வீசி வருகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் கால்வாய் பல இடங்களில் உடைந்து பழுதடைந்து காணப்படுகிறது. இந்த கால்வாயை உடனடியாக சீரமைக்க நீர்வளத் துறை அதிகாரிகளை கேட்டால், அவர்கள் சரியான பதில் தரவில்லை. எனவே வரும் 25ம் தேதிக்குள் திக்கணங்கோடு கால்வாயில் சீரமைத்து தண்ணீர் திறக்க திறக்க மாவட்ட நிர்வாகமும் நிர்வ ளத் துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி எனது தலைமையில் வருகிற மார்ச் 1ஆம் தேதி காலை திக்கணங்கோடு சந்திப்பில் சாலை மாறியில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.