அமைச்சர் பங்கேற்பு

நாய்களிடம் இருந்து பாதுகாக்க மாதிரி இரும்பு பட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைச்சர் முத்துசாமி பங்கேற்பு;

Update: 2025-02-23 04:37 GMT
ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிகோயில் திருப்பூர் மாவட்டங்களில் சமீப காலமாக பட்டிக்குள் புகுந்து நாய்கள் ஆடுகளை கடித்துக் கொன்று வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்களது வாழ்வாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு மாற்று ஏற்பாடாக ஈரோடு பெரியார் நகர் அருகே 80 அடி சாலையில் தெரு தெரு நாய்களிடமிருந்து ஆடுகளை பாதுகாக்கும் வகையில் இரும்பு ஸ்டீன்லெஸ் மாதிரி ஆட்டுப்பட்டி அமைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு வழிமுறை குறித்தும் தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் முத்துசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாதிரி ஆட்டுப்பட்டியை பார்வையிட்டு அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்த பொதுமக்கள் விவசாயிகளிடம் கூறினார். பின்னர்அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- விவசாயிகள் ஆடுகள், மாடுகள் வளர்ப்பது பொதுமக்களுக்கு உதவியாக உள்ளது.கடந்த ஒரு வருடம் காலமாக பட்டியலில் உள்ள ஆடுகளை நாய்கள் கடித்து கொன்று விடுகிறது. கடந்த 6 மாதத்தில் மிகப்பெரிய அளவில் இடையூறாக உள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மாற்று ஏற்பாடு, இழப்பீடு தொகை கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.இது குறித்து பரிசீலனையில் உள்ளது. பேரிடர் காலத்தில் மட்டும் தான் இழப்பீடு கொடுக்க முடியும் என்று உள்ளது.நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு இல்லை என்று உள்ளது. இழப்பீடு தொகை நியாயமான தொகை வழங்கும் ஆணைக்கு கோப்புகள் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இது குறித்து நிதித்துறை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.இதை தடுக்கும் வகையில் மாதிரி இரும்பு பட்டி அமைக்கப்பட்டுள்ளது. நாய்கள் ஆடுகளை கடிப்பது தவிர்க்க முடியாத வகையிலும் நாய் தாண்டி பட்டியல் போக முடியாத வகையில் இந்த இரும்பு பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது.இதனை சோதனை அடிப்படையில் பயன்படுத்தி விட்டு கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு இந்த முறையில் பட்டி அமைக்க அறிவுறுத்த உள்ளோம். முதலில் இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் கொடுக்க முதலவரிடம் தெரிவிக்கபட்டுள்ளது, இந்த பட்டியல் குறித்து இன்னும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. இதனால் தற்போது இதற்கான மானியம் வழங்க முடிவு செய்யவில்லை. இதுபோன்ற இரும்பு பட்டியல் அமைப்பதற்கான செலவு 60ஆயிரம் ரூபாய் ஆகியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Similar News