சிறுமி பலாத்காரம் மத போதகர் மனைவி மகன் கைது

கன்னியாகுமரி;

Update: 2025-02-23 11:15 GMT
குமரி மாவட்டம் செம்பருத்தி விளையை சேர்ந்தவர் ஜான்றோஸ் ( 63). இவர் பெருஞ்சிலம்பு பகுதியில் ஜெபக் கூடம் நடத்தி வருகிறார். இங்கு ஏராளமானவர் வந்து ஜபம் செய்வது வழக்கம். அந்தப் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவருடைய மனைவி மற்றும் 13 மகளும் அடிக்கடி ஜெபம் செய்ய வந்தனர். அப்போது சிறுமிக்கு  திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திருப்பது தெரிய வந்தது.      விசாரித்த போது  போதகர் ஜான்ரோஸ் பாலியல் பலாதாரம் செய்திருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரிடம் சிறுமியின் பெற்றோர்கள் இது குறித்து கேட்டனர். அப்போது ஜான் ரோஸ் மிரட்டல் விடுத்தாராம்.       மேலும் சிறுமி மற்றும் பெற்றோரை கேரள மாநிலம் கொல்லத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து மருத்துவ சிகிச்சை அளித்து உள்ளார். ஆனால் அங்குள்ள மருத்துவமனை நிர்வாகம் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து ஜான்ரோஸ் தலைமறைவு ஆகிவிட்டார்.      இந்த புகார் மனுவை கேரளா போலீசார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் தீவிர விசாரணை நடத்தி, கோவையில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான்றோசை கைது செய்தனர். மேலும் அவரது செயலுக்கு உடந்தையாக இருந்த அவர் மனைவி ஜெலின் பிரபா, மகன் பிரதீப் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Similar News