பைக்கை உடைத்து பணம் திருட்டு போலீசில் புகார்

புதுக்கடை;

Update: 2025-02-23 11:41 GMT
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே முள்ளூர் துறை பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (57). மீனவர். இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க சென்றார்.  அங்கு துறைமுக அலுவலர் அலுவலகம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். திருப்பி வந்து பார்த்த போது, யாரோ மர்ம நபர்கள்  ஸ்கூட்டியின் இருக்கையை  உடைத்து பைக்  உள்ளே இருந்த ரூ. 9 ஆயிரத்து 500 திருடி சென்றுள்ளனர். இது குறித்து அலெக்சாண்டர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News