குமரி மாவட்டம் இரணியல் அருகே வர்த்தக நாடார் குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் ஜெயசீலன் என்பவர் இளைய மகன் ஜெர்லின் சோனியட் (23). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் வேலை முடிந்து வந்த ஜெர்லினை தேங்காய் வெட்டும் தொழிலாளி ராதாகிருஷ்ணன், அவரது நண்பர் கண்ணன் என்பவரும் சேர்ந்து போனில் மிரட்டி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ஜெர்லின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தேங்காய் வெட்டும் தொழிலாளியும் அவர் நண்பரும் சேர்ந்து ஜெர்லின் சோனியட்டை கழுத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் சிடந்த அவரை உறவினர்கள் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று விடுகிறார். இரணியல் போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான ராதாகிருஷ்ணன், கண்ணன் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.