முதல்வர் மருந்தகம் திறப்பு விழா.

ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றதில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம்;

Update: 2025-02-24 15:40 GMT
ஆரணி அடுத்த எஸ்.வி.நகரத்தில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழகத்தில் தமிழகம் முழுவதம் 1000 முதல்வர் மருந்தகங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். இதில் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் உள்ள முதல்வர் மருந்தகத்தையும் காணொலி மூலம் திறந்து வைத்தார். அப்போது எஸ்.வி.நகரம் முதல்வர் மருந்தகத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். எஸ்.வி.நகரம் கூட்டுறவு கடன் சங்க செயல்ஆட்சியர் கே.சுரேஷ் தலைமை தாங்கினார். ஆரணி தொகுதி செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றியசெயலாளர்கள் மாமது, மோகன், சுந்தர், நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, நிர்வாகிகள் கே.டி.ராஜேந்திரன், முள்ளிப்பட்டு ரவி, மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News