பஸ்ஸில் நகைகளை திருடிய பெண்ணுக்கு காப்பு.
பஸ்ஸில் நகைகளை திருடிய பெண்ணுக்கு காப்பு.;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி அடுத்துள்ள ஆண்டி கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மனைவி தெய்வானை (55). இவர் கடந்த 6-ஆம் தேதி அன்று பேருந்தில் ஓசூர் வந்தார். ஓசூர் பேருந்து நிலையத்தில் இறங்கி அவர் வைத்திருந்த பையை பார்த்தபோது 4 பவுன் தங்க நகையுடன் வைத்திருந்த பர்ஸ் திருட்டு போனது. இதுகுறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் அவர் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணையில் தெய்வானையிடம் நகையை திருடியவர் பெத்ததாளபள்ளியை சேர்ந்த முனிராஜ் என்பவரின் மனைவி பழனியம்மாள் (40) என்பது தெரியவந்தது இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து, 4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.