மாரத்தான் போட்டியில் வென்ற பெண் தலைமை காவலருக்கு  பாராட்டு

நாகர்கோவில்;

Update: 2025-02-25 04:25 GMT
குமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் மருத்துவமனை சார்பில் மாரத்தான் போட்டியானது 23.02.2025 ம் தேதி நாகர்கோவில் அறிஞர் அண்ணா மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் கிருஷ்ண ரேகா 30-45 வயதினருக்கான 10 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசான 10,000 ரூபாய் பண பரிசு மற்றும் கோப்பையை பெற்றார்.        அவரை நேற்று  மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ஸ்டாலின்  வெற்றி பெற்ற பெண் தலைமை காவலரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Similar News