நாகர்கோவில் தபால் நிலையம் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து;
தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு இந்தியை திணிப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்து நாகர்கோவில் தாபல் நிலையம் முன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மாணவரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த் தலைமை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் கலந்து கொண்டு துவங்கி வைத்து ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் Ex.MP மற்றும் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மாணவரமைப்பினர் கலந்து கொண்டனர்.