வளவனூரில் துண்டு பிரசுரங்கள் வழங்கிய திமுக மாவட்ட செயலாளர்
திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்;
விழுப்புரம் மாவட்டம்,வளவனூர் பேரூராட்சி கடைவீதி பகுதியில் விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரும், மாநில மருத்துவர் அணி இணை செயலாளருமான டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள் வீதி, வீதியாக சென்று இந்தி திணிப்பை எதிர்த்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன் வளவனூர் பேரூராட்சி செயலாளர் பா.ஜீவா, பொதுக் குழு உறுப்பினர் TNJ.சம்பத், மாவட்ட பிரதிநிதி ஆ.கோ.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.