மனநலம் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் பகுதியில் சுற்றித் திரிந்த நபரை மீட்டு அவரின் உறவினருடன் அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். பின்னர் கருணை இல்லத்தில் மனநல மருத்துவர் மூலம் மேற்படி நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது;

Update: 2025-02-25 17:19 GMT
மனநலம் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் பகுதியில் சுற்றித் திரிந்த நபரை மீட்டு அவரின் உறவினருடன் அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி சாலைகளிலோ அல்லது பொது இடங்களிலோ சுற்றித்திரியும் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை மீட்டு கருணை இல்லத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஒப்படைத்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரிந்த சீனு (எ) சீனிவாசன் (40) என்ற நபரை கடந்த 08.09.2016- ம் தேதி மீட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். பின்னர் கருணை இல்லத்தில் மனநல மருத்துவர் மூலம் மேற்படி நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 25.02.2025-ம் தேதி பெரம்பலூர் மாவட்ட இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் பெரம்பலூர் மற்றும் அரியலூர்) Dr.K.மாரிமுத்து மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மருதமுத்து மற்றும் சித்ரா வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா, மனநல மருத்துவர் அசோக் ஆகியோர்கள் மேற்படி நபரை அவருடைய மனைவி சந்தியா, மணிறா நகர், சோமவாத, நகாக்பூர், மகாராஷ்டிரா மற்றும் சீனிவாசனின் மாமா திருப்பதி ஆகியோர்களிடம் நல்ல முறையில் ஒப்படைத்தனர்.

Similar News